இந்தியா

நாசிக்கில், மனித மூளை உள்பட ஏராளமான உடல் உறுப்புகள் கண்டெடுப்பு

28th Mar 2022 03:56 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், மூடி வைக்கப்பட்டிருந்த கடைக்குள் இருந்து 8 மனித காதுகள், மனித மூளை, கண்கள் மற்றும் சில உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மும்பை நகா பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வக்கப்பட்டிருந்த கடைக்குள்ளிருந்த மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூடி வைக்கப்பட்டிருந்த கடைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரை அடுத்து, காவல்துறையினர் கடையைத் திறந்து பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடையை சோதனையிட்ட காவலர்கள் கூறுகையில், கையை திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான பொருள்கள் கிடந்தன. அதில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியை திறந்து பார்த்தபோது மனித உடல் பாகங்கள் இருந்தன. உடனடியாக தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில், கடையின் உரிமையாளரின் இரண்டு மகன்களும் மருத்துவத் துறையில் உள்ளனர். எனவே, இந்த உடல் பாகங்கள் மருத்துவக் காரணங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும், சில உடல் பாகங்கள் ரசாயனங்களில் வைக்கப்பட்டிருந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடல் பாகங்கள் அனைத்தும் ஒரே சீராக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவத் துறையில் இருப்பவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT