இந்தியா

தில்லியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 2 பேர் காயம்

28th Mar 2022 11:33 AM

ADVERTISEMENT

 

மத்திய தில்லியின் ரஞ்சித் நகர் பகுதியில் சிலிண்டர் தீப்பிடித்ததில் 2 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து, தெரு எண் 211இல் நேற்றிரவு 9 மணிக்கு ஏற்பட்டுள்ளது, முன்னதாக ஞாயிறன்று மாலை 4 மணிக்கு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததையடுத்து, குடும்பத்தினர் ரெகுலேட்டரை அகற்றினர். 

அதன்பின்னர், தீக்குச்சி குச்சி மூலம் கேஸ் சிலிண்டரை கொளுத்தியுள்ளனர். அப்போது தீப்பிடித்து, சிலிண்டர் வெடித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில், 16 வயதான அன்சுமான் மற்றும் 18 வயதான ரித்தேஷ் முறையே 30 சதவீதம் மற்றும் 45 சதவீதம் தீக்காயங்கள் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருவரும் யுபிஎஸ்சி சிவில் தேர்வுக்குப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT