இந்தியா

தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக 2 பெண் நீதிபதிகள் பதவியேற்பு

28th Mar 2022 12:24 PM

ADVERTISEMENT

 

தில்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக இரண்டு புதிய பெண் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதி பூனம் ஏ.பாம்பா சாகேத் மற்றும் நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா ஆகியோருக்கு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பூனம் ஏ.பாம்பா சாகேத் மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதியாக இருந்தார். தில்லியின் ரோகினி மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஸ்வரனா காந்தா சர்மா.

ADVERTISEMENT

இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பதவியேற்பு விழா குறைந்த அளவிலேயே நடத்தப்பட்டதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆறு பேரில் இரண்டு புதிய நீதிபதிகளும் அடங்குவர்.

மற்ற நான்கு நீதிபதிகளான நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் சர்மா, அனூப் குமார் மெந்திரட்டா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோர் பிப்ரவரி 28 அன்று பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT