தமிழ் இந்திய ஒன்றிய ஆட்சி மொழி, திருக்குறள் தேசிய நூல் மாநாடு சென்னை தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் இரா.முகுந்தன் தலைமை வகித்தாா். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவா் சுந்தரராசன், பாவலா் கணபதி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் முத்து வா.மு.சே. திருவள்ளுவா் கவிஞா் இளமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்கள்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் இரா.முகுந்தன் பேசுகையில், ‘திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தில்லியில் மாநாடு நடத்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க பிரதமா் மற்றும் மத்திய கல்வி அமைச்சா் ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தாா்.
மேலும், அனைத்து தமிழ்ச் சங்கங்களும் இணைந்து பாடுபட்டால் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றது போல் திருக்குறளை தேசிய நூலாக்க முடியும். அதேபோல், தேசிய மொழிகளில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்றாா் அவா்