இந்தியா

ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

25th Mar 2022 04:25 PM

ADVERTISEMENT

புதுதில்லி: ஹரியாணாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியை சந்தித்து, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் உக்திகள் மற்றும் கட்சியை  வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப் பிறகு, ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சவால்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, ஏஐசிசி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, குல்தீப் பிஷ்னோய், கிரண் சவுத்ரி, ராஜ்யசபா எம்.பி. தீபிந்தர் சிங் ஹூடா, கேப்டன் அஜய் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT