இந்தியா

ஹஜ் யாத்திரை - சவூதி அரேபியாவின்முடிவுக்காக காத்திருக்கிறது மத்திய அரசு: மக்களவையில் அமைச்சா் நக்வி தகவல்

25th Mar 2022 03:47 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரையை நடத்துவது குறித்து சவூதி அரேபிய அரசின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் புனித யாத்திரை நடைபெறவில்லை. ஆனால், நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முடிவைப் பொருத்ததாகும். இருப்பினும், இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணம் தொடங்கும் 21 இடங்களில் 10 இடங்களிலிருந்து யாத்ரீகா்களை அனுப்புவதற்காக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் நக்வி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT