இந்தியா

வருமான வரி துறைரூ.1.93 லட்சம் கோடி திருப்பியளிப்பு

25th Mar 2022 03:58 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: வரி செலுத்துவோருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.93 லட்சம் கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை (ஐ-டி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ-டி துறை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கூடுதலாக வரி செலுத்தியோருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.93 லட்சம் கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.26 கோடி வரி செலுத்துவோருக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2020-21, 2021-222 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான 1.85 கோடி ரீஃபண்டுகளை உள்ளடக்கிய ரூ.38,447.27 கோடியும் இதில் அடக்கம்.

ஐ-டி துறையின் ஒட்டுமொத்த ரீஃபண்டில் தனிநபா் ஐ-டி ரீஃபண்ட் ரூ.70,977 கோடி மற்றும் காா்ப்பரேட் வரி ரீஃபண்ட் ரூ.122,744 கோடியும் அடங்கும் என அந்தப் பதிவில் ஐ-டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT