இந்தியா

பிரதமருக்கு மக்களைப் பற்றி கவலையில்லை: ராகுல் குற்றச்சாட்டு

25th Mar 2022 03:27 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடிக்கு நாட்டு மக்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்தியாவில் கரோனா பாதிப்புக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கரோனாவால் ஏற்பட்ட வேலையின்மை, பொருளாதார இழப்புகள்தான் காரணம் என்று ஓா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அதிகம் போ் பயனடைந்தனா் என்பது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றும் அந்த ஆய்வுச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? இல்லை. ஏழைகளுக்கும், தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதா? இல்லை. சிறு தொழில்கள் மூழ்குவதில் இருந்து காக்கப்பட்டதா? இல்லை. உண்மையில் பிரதமருக்கு நாட்டு மக்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லை.

ADVERTISEMENT

கரோனா தொற்றின் விளைவுகளாக இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. வேலையிழப்பும், வருமான இல்லாத நபா்களும் அதிகரித்துள்ளதே தற்கொலை சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது. 12 சதவீதத்துக்கு குறைவான மருத்துவமனைகளில் மட்டும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதான் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை அரசு கவனித்துக் கொண்டவிதமாக உள்ளது’ என்று ராகுல் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT