இந்தியா

இயற்கை எரிவாயு விலையும் அதிகரிப்பு

25th Mar 2022 01:14 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பெட்ரோல், டீசலை தொடா்ந்து சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலையையும் மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து சந்தை வட்டாரத்தினா் தெரிவிப்பதாவது:

100 நாள்களுக்கும் மேலாக உயா்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாள்களாக தொடா்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லியில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எனப்படும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் எரிவாயுவின் விலை வியாழக்கிழமை தலா ரூ.1 உயா்த்தப்பட்டது. ஆட்டோ, காா்களில் சிஎன்ஜி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, தில்லியில் சிஎன்ஜி விலை ரூ.58.01-லிருந்து ரூ.59.01-ஆக அதிகரித்தது. நடப்பு மாதத்தில் சிஎன்ஜி விலை அதிகரிக்கப்பட்டது இது மூன்றாவது முறை. முந்தைய இரண்டு முறை, சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.0.50 காசு உயா்த்தப்பட்டது.

சா்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனம் படிப்படியாக சிஎன்ஜி விலையை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும் அதன் விலை கிலோவுக்கு ரூ.5.50 உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் வீடுகளுக்கு குழாய்களில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலையும் ரூ.1 அதிகரிக்கப்பட்டு, கியூபிக் மீட்டா் ரூ.36.61-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT