இந்தியா

கூட்டுப் பயிற்சி: உஸ்பெகிஸ்தான் விரைந்தது இந்திய ராணுவப் படைப்பிரிவு

22nd Mar 2022 08:47 PM

ADVERTISEMENT

 

உஸ்பெகிஸ்தான் உடனான கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவ படைப்பிரிவு அந்நாட்டிற்கு விரைந்துள்ளது.

இந்தியா – உஸ்பெகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான மூன்றாவது கூட்டுப் பயிற்சி மார்ச் 22 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

படிக்க60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி: கூடுதலாக இருந்தால் அகற்றப்படும் -நிதின் கட்கரி

ADVERTISEMENT

இந்திய ராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவை உள்ளடக்கிய வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். இத்தகைய பயிற்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரகண்டில் நடைபெற்றது.

இரு தரப்பு ராணுவத்தினரும் பயிற்சியின்போது நடைமுறை உத்திகளை பகிர்ந்து கொள்வதும், பின்னர் சிறந்த நடைமுறைகளை கற்றறிவதும் இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாக உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT