பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் நிபுணர் குழு ஒன்றை யுஜிசி அமைத்துள்ளதாக கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 2020 ஜூலை 29ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கை 2020 கல்வி அமைச்சகம் அறிவித்தது.
படிக்க | நீட் தேர்வால் மாணவர்களின் கனவுகள் வீணாகின்றன: குமாராசாமி
ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக, முழுமையான மற்றும் பலமுனை கல்வியை வழங்குவதற்காக, பல்முனை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைக்கிறது.
அனைத்து கல்வித் திட்டங்கள், படிப்புகள், பாடங்கள் உள்ளிட்டவை உலகத் தரத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொள்ள வேண்டும்
ஒழுங்குமுறை, அங்கீகாரங்கள், நிதி வழங்கல், மற்றும் கல்வித்தர நிர்ணயம் ஆகிய நான்கு சுதந்திரமான பிரிவுகளைக் கொண்ட இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை உருவாக்குவதில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதங்களை, 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக அதிகரிக்க நிபுணர் குழு ஒன்றைப் பல்கலைக்கழக மானிய குழு அமைத்துள்ளது என்று கூறினார்.