பஞ்சாப் மாநிலங்களவைக்கான 5 உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடுகிறார்.
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு இன்று மனுத்தாக்கல் நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மனுத்தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், விளையாட்டை மேம்படுத்துவதிலும், பஞ்சாப் இளைஞர்களை விளையாட்டுடன் இணைப்பதிலுமே எனது கவனம் இருக்கும். இந்தியா போன்ற அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு ஒலிம்பிக் போட்டியில் 200 பதக்கங்களையாவது வெல்ல வேண்டும். நாட்டில் விளையாட்டை மேம்படுத்த எல்லாவற்றையும் செய்வேன் என்று கூறினார்.