இந்தியா

12 மணிநேரத்தில் உருவாகிறது ஆசனி புயல்

21st Mar 2022 11:00 AM

ADVERTISEMENT

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நிகோபர் தீவுகளுக்கு 200 கிலோ மீட்டர் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும், அந்தமான் தீவுகளுக்கு 100 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மருக்கு செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'ஆசனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிகோபாா் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அங்குள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அதேசமயம் இந்த புயலால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து 1-800-345-2714 என்ற இலவச டோல்-ஃப்ரீ எண்ணை அந்தமான் நிகோபார் தீவுகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Cyclone Asani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT