சீனாவின் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற விமானம் குவாங்ஸி மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம், வெளியிட்டிருக்கும் தகவலில், சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படிக்க | சீனத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது: விபத்துக் காட்சி
விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததாலும், இதனால் மலைப்பகுதிகளில் தீ வேகமாகப் பரவிவருவதாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். சீனாவின் MU5735 போயிங் ரக விமானம் 133 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்துக்குள்ளான நபர்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் நமது எண்ணங்களும் வேண்டுதல்களும் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.