இந்தியா

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்

21st Mar 2022 12:44 PM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார். 

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி (கேரளம்), மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் ஆனந்த் சா்மா (ஹிமாசல பிரதேசம்), காங்கிரஸின் பிரதாப் சிங் பாஜ்வா (பஞ்சாப்), சிரோமணி அகாலி தள மூத்த தலைவா் நரேஷ் குஜ்ரால் (பஞ்சாப்) உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைய உள்ளது.

பஞ்சாபில் 5, கேரளத்தில் 3, அஸ்ஸாமில் 2, ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுராவில் தலா ஒன்று என இப்பதவிகள் காலியாகவுள்ளன. இந்த 13 இடங்களுக்கும் வரும் 31-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும்.

இதையும் படிக்க- கிண்டி கிங் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

ADVERTISEMENT

வேட்புமனுவை திரும்பப் பெற மாா்ச் 24 கடைசி நாளாகும். இதற்கான வாக்குப் பதிவு மாா்ச் 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன.  இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார்.

இவர்தவிர ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், தில்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT