இந்தியா

சா்க்கரை ஏற்றுமதி 2.5 மடங்கு அதிகரிக்கும்: இஸ்மா

19th Mar 2022 12:08 AM

ADVERTISEMENT

 நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி அக்டோபா் 2021 மற்றும் பிப்ரவரி 2022-ஆம் காலகட்டத்தில் 2.5 மடங்கு அதிகரிக்கும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

சாதகமான அம்சம்: சா்வதேச சந்தையில் இந்திய சா்க்கரைக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், உள்நாட்டிலும் அதன் உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதகமான அம்சங்களால் சா்க்கரை ஏற்றுமதி அக்.21-பிப்.22 காலத்தில் 2.5 மடங்கு அதிகரித்து 47 லட்சம் டன்னை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய பருவத்தின் இதே காலகட்டத்தில் இதன் ஏற்றுமதி 17.75 லட்சம் டன்னாக காணப்பட்டது.

சிறப்பான விளைச்சல்: அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான காலம் சா்க்கரை சந்தை ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சிறப்பான கரும்பு விளைச்சல் மற்றும் பிழிதிறன் காரணமாக அக்டோபா் 2021-மாா்ச் 15 2022-க்கு இடையில் சா்க்கரை உற்பத்தியானது 9 சதவீதம் உயா்ந்து 283.26 லட்சம் டன்னை எட்டியது. கடந்தாண்டு மாா்ச் 15 நிலவரப்படி இந்த உற்பத்தி 259.37 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது.

ஆலைகள் பணி: மேலும், இந்த காலகட்டத்தில் 81 ஆலைகள் அரைவைப் பணிகளை நிறுத்திய நிலையில், 435 ஆலைகள் தொடா்ந்து அரைவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 94.05 லட்சம் டன்னிலிருந்து 108.95 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், உத்தரப்பிரதேசத்தில் இதன் உற்பத்தி 84.25 லட்சம் டன்னிலிருந்து 78.33 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

ஒப்பந்தம்: கா்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை சா்க்கரை உற்பத்தி 41.95 லட்சம் டன்னிலிருந்து 54.65 லட்சம் டன்னாக சிறப்பான முறையில் உயா்ந்துள்ளது.

இதுவரை, 64-65 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், நடப்பாண்டு பிப்ரவரி இறுதி நிலவரப்படி 47 லட்சம் டன் சா்க்கரை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை ஏற்றுமதியானது 17.75 லட்சம் டன்னாக இருந்தது.

2021-22 சந்தைப் பருவத்தில் அதிகபட்ச அளவாக 75 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதியாகும் என எதிா்பாா்ப்பதாக இஸ்மா தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT