இந்தியா

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்: ராகுல் காந்தி

19th Mar 2022 11:43 PM

ADVERTISEMENT

நாட்டின் பணவீக்கம் (விலைவாசி உயா்வு) மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

பணவீக்கம் என்பது அனைத்து இந்தியா்களுக்கும் விதிக்கப்பட்ட வரியாகும். ரஷியா-உக்ரைன் இடையிலான போா் தொடங்குவதற்கு முன்பே வரலாறு காணாத விலைவாசி உயா்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவுப் பொருள்கள் விலை உயா்வு, கரோனா தொற்றால் உலகளாவிய விநியோக நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவற்றால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

எனவே மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT