இந்தியா

மின்னல் பாய்ந்து இத்தனை பேர் பலியா? அதிர வைக்கும் அரசு தரவு

19th Mar 2022 02:38 PM

ADVERTISEMENT


2016-2020 காலகட்டங்களில் 14,295 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இந்தத் தரவை முன்வைத்துள்ளது.

மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட தரவின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 14,295 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். 2016-இல் 3,315 பேரும், 2017-இல் 2,885 பேரும், 2018-இல் 2,357 பேரும், 2019-இல் 2,876 பேரும், 2020-இல் 2,862 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2020-இல் பிகார் மாநிலத்தில் அதிகளவாக 436 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் 429 பேரும், ஜார்க்கண்டில் 336 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 304 பேரும், ஒடிசாவில் 275 பேரும், சத்தீஸ்கரில் 246 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கபஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அது உண்டாக்கிய சேதத்தைக் கருத்தில் கொண்டு இதனை இன்னும் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்காததற்கான காரணத்தையும் கனிமொழி கேள்வியாக எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு நிதியை குறிப்பிடப்பட்டுள்ள 12 பேரிடர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஏற்கெனவே உள்ள பேரிடர் பட்டியலில் புதிதாக பேரிடர்களை இணைப்பது குறித்து 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. தேசிய மற்றும் மாநில பேரிடர் நிதி, மாநிலங்களின் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்வதால், புதிதாக பேரிடர்களை பட்டியலில் இணைப்பதற்கானப் போதிய காரணங்கள் ஏதும் இல்லை என ஆணையம் குறிப்பிட்டுள்ளது" என்றார். 

அவர் மேலும் கூறுகையில், மாநில அளவில் பேரிடர் எனக் கருதப்படும் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெறாத சில பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் ஆண்டு ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் வரையிலான நிதியை விதிகளுக்குள்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக மாநில அரசு வழங்கலாம் என்றார்.

Tags : Lightning
ADVERTISEMENT
ADVERTISEMENT