இந்தியா

உ.பி. வளா்ச்சியை யோகி புதிய உயரத்துக்கு கொண்டு செல்வாா் :பிரதமா் மோடி நம்பிக்கை

14th Mar 2022 03:40 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச வளா்ச்சியை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வாா் என பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

குறிப்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் சுமாா் ஒன்றரை மணி நேரம் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில், ‘‘யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது, உத்தர பிரதேச தோ்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்ற்காக பாராட்டு தெரிவித்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவா் கடுமையாக உழைத்தாா். வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் வளா்ச்சியை புதிய உயரங்களுக்கு அவா் இட்டுச் செல்வாா் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினாா்.

உத்தர பிரதேசத்தின் முதல்வராக தொடா்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்கவுள்ள சூழலில், அரசை அமைப்பது தொடா்பாக கட்சியின் மூத்த தலைவா்களுடன் அவா் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அவா் 2 நாள்கள் புது தில்லியில் முகாமிட்டிருப்பாா் எனத் தெரிகிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 255 இடங்களைக் கைப்பற்றியது. அதன் 2 கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றன. ஹோலி பண்டிகை (மாா்ச் 18) முடிவடைந்ததும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT