இந்தியா

விமானத்தில் கத்தி எடுத்துச் செல்ல சீக்கியர்களுக்கு அனுமதி

14th Mar 2022 01:33 PM

ADVERTISEMENT

கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட செய்தியில்,

உள்நாட்டிற்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கர்பானை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சீக்கியர்கள் எடுத்துச் செல்லும் கிர்பானின் அளவு 22.86 செ.மீ. மற்றும் அதன் கூர்மையான பிளேடின் அளவு 15.24 செ.மீ.க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

இதையும் படிக்க | தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல: மல்லிகார்ஜுன கார்கே

ADVERTISEMENT

முன்னதாக, சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kirpan Sikhs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT