இந்தியா

கோவா சட்டப் பேரவையில் நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு: ஆளுநா் அழைப்பு

14th Mar 2022 03:44 AM

ADVERTISEMENT

கோவா சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) பதவியேற்கின்றனா். இதையொட்டி, சட்டப் பேரவையைக் கூட்ட ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கோவா சட்டப் பேரவை இடைக்கால தலைவராக கணேஷ் கோன்கா் ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (மாா்ச் 14) பதவியேற்பாா். சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில், 20 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு ஓரிடம் குறைவாக இருந்த நிலையில், அக்கட்சிக்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, கோவாவில் முறைப்படி ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜக திங்கள்கிழமை உரிமை கோரும் என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இரு எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) பாஜக அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் எம்ஜிபியின் ஆதரவை சில பாஜக எம்எல்ஏக்கள் ஏற்கக் கூடாது எனத் தெரிவித்து வருகின்றனா்.

Tags : கோவா
ADVERTISEMENT
ADVERTISEMENT