இந்தியா

பஞ்சாபை தொடர்ந்து குஜராத், ஹிமாச்சலை குறிவைக்கும் ஆம் ஆத்மி

14th Mar 2022 03:21 PM

ADVERTISEMENT

பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பேரவைகளுக்கான தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதன்மூலம், ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் ஹிமாச்சல் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மி களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை ஏற்கனவே சூரத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளன. பஞ்சாபில் ஏற்பட்ட தாக்கம் எல்லை மாநிலமான ஹிமாச்சலிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆகையால், ஆம் ஆத்மி கட்சியினர் இந்த இரண்டு மாநிலங்களையும் குறிவைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க |'ஆம் ஆத்மி' அரசியல் கட்சியாக மாறிய கதை

வரும் நவம்பர் மாதம் இரு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வராகவுள்ள பகவந்த் மானும் விரைவில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

நாட்டிலேயே ஒரு மாநிலங்களுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் கட்சியாக காங்கிரஸுக்கு அடுத்து ஆம் ஆத்மி உருவெடுத்துள்ள நிலையில் தனது கட்சியை மேலும் விரிவுபடுத்தும் பணிகளை வேகப்பட்டுத்தியுள்ளது.

இதையும் படிக்க | 12 - 14 வயதுடையோருக்கு மார்ச் 16 முதல் கரோனா தடுப்பூசி

ADVERTISEMENT
ADVERTISEMENT