இந்தியா

நாட்டில் புதிதாக 2,503 பேருக்குத் தொற்று: 4,377 பேர் மீட்டனர்

14th Mar 2022 09:50 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 2,503 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,29,93,494 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,877-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

ADVERTISEMENT

நேற்று ஒரேநாளில் 4,377 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,41,449 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 36,168 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.083 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.07 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.47 சதவிகிதமாகவும், வராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 0.47 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 1,79,91,57,486 (179.91 கோடி) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,80,144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 77.90 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,32,232 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT