இந்தியா

ஹிஜாப் தீர்ப்பு: பெங்களூருவில் மார்ச் 21 வரை தடை உத்தரவு

14th Mar 2022 09:38 PM

ADVERTISEMENT


ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ள நிலையில், பெங்களூருவில் மார்ச் 21-ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சரச்சை எழுந்தது. இதன் பின்னணியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கர்நாடக அரசு பிப்ரவரி 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையும் படிக்கஹிஜாப்: கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தினமும் விசாரித்து வந்தது. 11 நாள்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை வாசிக்கப்படுகிறது.

தீர்ப்பு வெளியாவதையொட்டி, பெங்களூருவில் நாளை முதல் 7 நாள்களுக்கு மார்ச் 21 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும், கொண்டாட்டங்களுக்கும் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பந்த் ஒருவார காலத்துக்குத் தடை விதித்துள்ளார்.

Tags : hijab
ADVERTISEMENT
ADVERTISEMENT