இந்தியா

கரோனா இழப்பீடு பெறுவதில் முறைகேடு: உச்சநீதிமன்றம் வருத்தம்

14th Mar 2022 12:37 PM

ADVERTISEMENT

கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 50,000 தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து இழப்பீடு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு தர உத்தரவிட்டிருந்தோம். ஆனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடு தர சொல்லவில்லை. இழப்பீடு பெற போலி ஆவணங்கள் சமர்பித்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவது அவசியமாகிறது என்றனர்.”

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT