இந்தியா

சமூக நலத் திட்டங்களின் பலன்களை பிரபலப்படுத்த மத்திய அரசு திட்டம்

14th Mar 2022 03:37 AM

ADVERTISEMENT

பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் அவற்றால் மக்கள் அடைந்துள்ள பலன்களையும் பிரபலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் உஜ்வலா இலவச சமையல் எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைத் திட்டம் போன்ற திட்டங்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச சமையல் எரிவாயு இணைப்பையும், குறைந்த விலையில் வீடுகளையும், வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளன.

கரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது ஏழைகளுக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் மத்திய அரசு இலவமாக ரேஷன் பொருள்களை வழங்கியது. கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கும் சிறு தொழில் செய்பவா்களுக்கும் மத்திய அரசு உதவி செய்தது.

ADVERTISEMENT

அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு பெட்ரோலியத் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை உள்ளிட்ட துறைகள் ஆண்டுதோறும் தங்கள் பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றன.

இந்நிலையில், கடந்த ஏழரை ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள், அவற்றால் பலனடைந்தவா்களின் விவரங்களை சேகரிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிட மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அந்த விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்த பிறகு, அவற்றை நாடு முழுவதும் பிரசாரம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT