இந்தியா

கனடா சாலை விபத்து: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

14th Mar 2022 11:22 AM

ADVERTISEMENT

புதுதில்லி: கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொரோண்டோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக, கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 5 மாணவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

IndiainToronto தேவையான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கனடாவின் டொரோண்டா நகரின் அருகே சனிக்கிழமை டிராக்டர் டிரைலர் மீது பயணிகள் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இந்திய மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT