இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி

14th Mar 2022 04:54 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அம்மாநிலத்திற்கான பொறுப்பாளர் சஞ்சய் பாஷு திங்கள்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பேரவைகளுக்கான தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதன்மூலம், ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க ஆம் ஆத்மி பொறுப்பாளர் சஞ்சய் பாஷு இன்று வெளியிட்ட செய்தியில்,

“மேற்கு வங்கத்தில் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும். கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்படி, ஏற்கனவே பிரசாரங்களை தொண்டர்கள் தொடங்கிவிட்டனர். மார்ச் 13ஆம் தேதி கொல்கத்தாவில் பேரணியும் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.”

ADVERTISEMENT

மேலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குஜாராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | பஞ்சாபை தொடர்ந்து குஜராத், ஹிமாச்சலை குறிவைக்கும் ஆம் ஆத்மி

 

ADVERTISEMENT
ADVERTISEMENT