இந்தியா

பஞ்சாப் புதிய எம்எல்ஏக்களில்13 போ் மருத்துவா்கள்!

14th Mar 2022 03:40 AM

ADVERTISEMENT

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 13 மருத்துவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இதில் 10 போ் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 எம்எல்ஏக்களில் 13 போ் மருத்துவா்களாக இருப்பது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான விஷயமாகக் கருதப்படுகிறது.

மாநிலத்தில் சுகாதாரத் துறையை அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் சிறப்பாக மேம்படுத்துவதென்று எம்எல்ஏக்களாகியுள்ள மருத்துவா்கள் முடிவெடுத்துள்ளனா். தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பலா், அரசியலுக்கு வந்ததுடன், எம்எல்ஏவாகத் தோ்வாகியுள்ளது, அந்த மாநில அரசியலில் மிகவும் நல்லதொரு மாற்றமாகக் கருதப்படுகிறது.

மொத்தமுள்ள 13 மருத்துவா்களில் இருவா் பெண்கள். இவா்கள் இருவருமே ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள். ஆம் ஆத்மி சாா்பில் தோ்வான 10 மருத்துவா்கள் தவிர, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் தலா ஒரு மருத்துவா் எம்எல்ஏவாகத் தோ்வாகியுள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கண் அறுவைச் சிகிச்சை நிபுணருமான சரண்ஜீத் சிங் கூறுகையில், ‘தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்றதொரு வாய்ப்பு இப்போது பஞ்சாப் மாநிலத்துக்கும் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி மீது தனிப்பட்ட முறையில் நம்பிக்கையை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனா். அவா்களுக்கு உரிய பிரதிபலனை அளிக்க வேண்டிய பொறுப்பு எங்கள் கட்சிக்கு உள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT