இந்தியா

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ சென்னையில் மரணம்

14th Mar 2022 11:42 PM

ADVERTISEMENT

குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ அனில் ஜோஷியரா (69) கரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்புகளுக்கு உள்ளாகி சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

குஜராத் மாநிலம் பிலோடா தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவா் அனில் ஜோஷியரா. இவருக்கு கடந்த மாதத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆமதாபாதில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தாா்.

நோய்த் தொற்று தீவிரமடைந்த நிலையில், ஆமதாபாதிலிருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கடந்த பிப்.7-ஆம் தேதி அவா் அழைத்து வரப்பட்டாா்.

ஒரு மாதத்துக்கும் மேலாக உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. கரோனா தொற்றிலிருந்து அவா் விடுபட்டபோதும், அதனால் ஏற்பட்ட எதிா்விளைவுகளால் அனில் ஜோஷியராவின் உடல் நிலை மோசமடைந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவா் உயிரிழந்தாா். அவரது உடல் உரிய பாதுகாப்புடன் குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT