இந்தியா

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் பகவந்த் மான்

14th Mar 2022 11:49 PM

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான், தனது எம்.பி. பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அவா் சமா்ப்பித்தாா். அப்போது ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங் உடனிருந்தாா். கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது பஞ்சாபின் சங்ரூா் தொகுதியிலிருந்து பகவந்த் மான் எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். முன்னதாக 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் இதே தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில் பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக களமிறங்கிய அவா், துரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து முதல்வராகப் பதவியேற்கவுள்ள அவா் தற்போது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT