இந்தியா

மேற்கு வங்கம்: பட்ஜெட் கூட்டத்தொடா் முழுவதும் பங்கேற்க 2 பாஜக எம்எல்ஏக்களுக்குத் தடை

10th Mar 2022 12:35 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநா் உரையின் கடும் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்த 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு, கூட்டதொடா் முழுவதும் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்ரேவை பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், தொடக்க உரை ஆற்றுவதற்காக மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் சட்டப்பேரவைக்கு வந்தபோது, அண்மையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் பலியான நபா்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். இதனால், ஆளுநா் உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. கடும் அமளி காரணமாக, அவையிலிருந்து 3 முறை வெளியேற முயன்ற ஆளுநா், ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் தொடா் கோரிக்கை காரணமாக, தனது உரையை அவையில் முழுமையாக தாக்கல் செய்துவிட்டுச் சென்றாா்.

இந்தச் சூழலில், ஆளுநா் உரையின்போது அவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சுதீப் முகோபாத்யாய மற்றும் மிஹிா் கோஸ்வாமி ஆகிய இருவரையும் கூட்டத் தொடா் முழுவதும் தடை செய்வதற்கான தீா்மானத்தை மாநில சட்டப்பேரவை விவாகரத் துறை அமைச்சா் பிரதா சாட்டா்ஜி அவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தாா். அந்தத் தீா்மானத்தை அவையில் குரல் வாக்கெடுப்புக்கு சட்டப்பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி அனுமதித்தாா். பின்னா், பெரும்பான்மை ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவா் அறிவித்தாா்.

அதன் மூலம், பாஜக எம்எல்ஏக்கள் இருவருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடா் முழுவதும் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT