இந்தியா

கோவா: டிஎம்சி-க்கு எல்லா இடங்களிலும் பின்னடைவு

10th Mar 2022 04:00 PM

ADVERTISEMENT


கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாகப் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் 4 இடங்களில் திரிணமூல் முன்னிலை வகித்தது. ஆனால், தற்போது எந்தவொரு இடத்திலும் திரிணமூல் முன்னிலை வகிக்கவில்லை.

இதையும் படிக்கமகாராஷ்டிராவுக்காக பாஜக இன்னும் 2.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: சரத் பவார்

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் பிற்பகல் 3.15 நிலவரப்படி திரிணமூல் 5.22 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 7.65 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. சில தொகுதிகளில் திரிணமூல் வேட்பாளர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கின்றனர்.  

திரிணமூல் மாநிலத் தலைவர் கிரண் கண்டோல்கர் உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்களே பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

"இந்தத் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து கோவா மக்களின் நம்பிக்கை மற்றும் அன்பை ஈட்ட கடுமையாக உழைப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம். அதற்கு எத்தனை காலம் எடுத்துக்கொண்டாலும் சரி. நாங்கள் இங்கேயேதான் இருப்போம். கோவா மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவோம்" என்று திரிணமூல் காங்கிரஸின் கோவாவுக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags : 5StatesResult
ADVERTISEMENT
ADVERTISEMENT