இந்தியா

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் இன்று ராஜிநாமா?

10th Mar 2022 12:10 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதை அடுத்து, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்றே தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 117ல் 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதியாகியுள்ளது. 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட சம்கௌர் சாஹிப் மற்றும் பதெளர்( Chamkaur Sahib and Bhadaur) ஆகிய 2 பேரவை தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளார். 

ADVERTISEMENT

மேலும் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி உறுதியானதை அடுத்து, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்றே தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சற்றுமுன்பாக  அவர் சண்டீகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT