இந்தியா

மோடியின் புகழையே காட்டுகிறது: தேர்தல் முடிவு குறித்து பியூஷ் கோயல்

10th Mar 2022 04:28 PM

ADVERTISEMENT

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 37 ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை பூர்த்தி செய்த முதல்வர் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராவது இதுவே முதல்முறை.

உத்தரகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து, ஆளுங்கட்சி வெற்றிபெறுவது இதுவை முதல்முறை. ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "இது நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு உள்ள புகழையே காட்டுகிறது. 

இதையும் படிக்கமுடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியின் சமூக நலத்திட்டங்கள் நேர்மையாக செயல்படுத்தப்பட்டதன் விளைவு இது. வளர்ச்சிக்கான புல்டோசர் உத்தரப் பிரதேசத்தில் யில் தொடர்ந்து செயல்படும். கோவா மற்றும் மணிப்பூரில் முன்பை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளோம்" என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT