இந்தியா

இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: அஜித் தோவல்

10th Mar 2022 01:48 AM

ADVERTISEMENT

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வலியுறுத்தினாா்.

மாலத்தீவின் மாலியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் நிலையிலான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் அஜித் தோவல் பங்கேற்றாா். அதில் பேசியபோது இவ்வாறு வலியுறுத்தியதாக மாலத்தீவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை, மாலத்தீவு, மோரீஷஸ், வங்கதேசம், சிசெல்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள், பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனா்.

இதில் பேசிய மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சா் மரிய தீதி, மாலத்தீவு எதிா்கொள்ளும் போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், கடற்கொள்ளையா் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு சவால்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT

இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பாதுகாப்பு கட்டமைப்பாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT