இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

10th Mar 2022 12:33 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து தேடுதல் நடவடிக்கை துப்பாக்கிச்சூடாக மாறியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். 

ADVERTISEMENT

கொல்லப்பட்ட தீவிரவாதியை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் குழு ஈடுபட்டுள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT