இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு

10th Mar 2022 11:19 AM

ADVERTISEMENT

 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா பட்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

புல்வாமாவின் நைனா பட்போரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT