இந்தியா

மத்திய அரசுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் ரூ.888 கோடி ஈவுத்தொகை

10th Mar 2022 12:18 AM

ADVERTISEMENT

பொதுத் துறை நிறுவனங்களான நால்கோ, பிபிசிஎல் உள்ளிட்டவை மத்திய அரசுக்கு ரூ.888 கோடி ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) வழங்கியுள்ளன.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் (டிஐபிஏஎம்) செயலா் துகின் கந்தா பாண்டே புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியது:

மத்திய அரசின் பங்கு மூலதனத்துக்கு பொதுத் துறை நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஈவுத்தொகை நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.49,059 கோடி பெறப்பட்டுள்ளது. நால்கோவிடமிருந்து ரூ.283 கோடியும், பிபிசிஎல் ரூ.575 கோடி, எம்எஸ்டிசி ரூ.30 கோடியும் ஈவுத்தொகையாக பெறப்பட்டுள்ளன.

என்பிடிபிசியிடமிருந்து மொத்தம் இதுவரை ரூ.1,982 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, ஐஓசியிடமிருந்தும் ரூ.1,939 கோடி பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், என்ஹெச்பிசியிடமிருந்து ரூ.934 கோடியும், கெயில் ரூ.914 கோடி, ஆயில் இந்தியா ரூ.353 கோடி ஈவுத்தொகையினை மத்திய அரசு பெற்றுள்ளதாக அந்தப் பதிவில் துகின் கந்தா தெரிவித்துள்ளாா்.

Tags : dividend
ADVERTISEMENT
ADVERTISEMENT