இந்தியா

கோவா: தொடர்ந்து முன்னிலையில் முதல்வர் பிரமோத் சாவந்த்

10th Mar 2022 11:39 AM

ADVERTISEMENT

 

கோவாவில் பாரதிய ஜனதா கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. 

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 

காலை 10.30 மணி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள்: செய்திகள் உடனுக்குடன்

தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த் இதுவரை 300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் என்று சான்குலிம் சட்டமன்றத் தொகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் 21 சட்டமன்ற இடங்கள் பெரும்பான்மையில் உள்ளது.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் (AAP) ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது. வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில், பாஜக 33.74 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் 23.77 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கோவா பார்வர்டு கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT