இந்தியா

கோவா முன்னாள் முதல்வரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வி

10th Mar 2022 01:41 PM

ADVERTISEMENT

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு வந்த பனாஜி தொகுதி, அவரது மறைவுக்குப் பிறகு பனாஜி தொகுதி அவரது மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் அட்டனாசியோ மான்செரேட்டுக்கு பனாஜி தொகுதி வழங்கப்பட்டதை அடுத்து உத்பல் பாரிக்கர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். 

இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பனாஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் அட்டனாசியோ மான்செரேட்டிடம் உத்பல் பாரிக்கர் தோல்வியுற்றார். 

'சுயேச்சையாகப் வேட்பாளராக இது ஒரு நல்ல போட்டி. போட்டியில் திருப்தி இருந்தாலும் முடிவில் சற்று ஏமாற்றம்தான். பனாஜி மக்களுக்கு நன்றி' என உத்பல் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT