இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார்: சுஷில் சந்திரா

10th Mar 2022 10:51 AM

ADVERTISEMENTபுதுதில்லி: ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அதேநேரத்தில் அரசியல் சாசனத்தில் அதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையை கொண்டு வருவது நல்ல யோசனை தான், ஆனால், இந்த மாற்றத்திற்கு கால அவகாசம் தேவைப்படும், அதை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். 

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரப்பட்டால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யத் தயாராக உள்ளது மற்றும் அதற்கான திறனுடையதாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று மீண்டும் உறுதிப்படுத்தியவர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். அனைத்து தேர்தல்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று சுஷில் சந்திரா கூறினார்.

மேலும் ஐந்து மாநிலங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது தேர்தல் ஆணையம்,  நாட்டில் தற்போது நிலவும் கரோனா நோய்தொற்று பரவலை மனதில் கொண்டு, அரசியல் பேரணிகள் மற்றும் பாதயாத்திரைகள் எதுவும் அனுமதிக்கப்படாததால், தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் காணப்பட்டது என்றும், இது கடினமான முடிவு என்றாலும், வாக்காளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் முடிவை களத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றதாகவும், வாக்களிப்பும், வாக்காளரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கருத்து," என்று சுஷில் சந்திரா கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT