இந்தியா

ஆம் ஆத்மி வெற்றியையும் முன்கூட்டியே கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்சர்?

10th Mar 2022 06:06 PM

ADVERTISEMENT


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. பஞ்சாபில் வாக்குகள் எண்ணத் தொடங்கிய நான்கு மணி நேரத்திலேயே 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெறத் தொடங்கியது. இதன் மூலம், வரலாற்று வெற்றியை அக்கட்சி பதிவு செய்கிறது.

இதற்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருப்பதாக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் வெற்றிக்கும் ஆர்ச்சரின் ட்விட்டர் பதிவுக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி ஏழாமல் இல்லை.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி, மாபெரும் வெற்றியா? என பொருள்படும் அளவுக்கு 'ஸ்வீப்' என அவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவைதான், கட்சி பெற்ற வெற்றியுடன் ஒப்பிட்டு ஆம் ஆத்மி குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கபாஜகவுக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை: ஹரிஷ் சிங் ராவத்

கிரிக்கெட்டில் கலக்கிவரும் அவர், சமூக ஊடகங்களிலும் மிகப் பிரபலமாக உள்ளார். அவ்வப்போது அவர் வெளியிடும் பதிவை பல்வேறு விவகாரங்களோடு ட்விட்டர்வாசிகள் பொருத்திப் பார்ப்பது உண்டு.

கடந்த 2013ஆம் ஆண்டு, மாரச் மாதம், 'மார்ச் 24' என ஆர்ச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதை, கரோனா முதல் அலையைத் தொடர்ந்து இந்தியாவில் அமல்படுத்தபட்ட பொதுமுடக்கத்துடன் ட்விட்டர்வாசிகள் ஒப்பிட்டனர். 

கடந்த 2013ஆம் ஆண்டு, மார்ச் 22ஆம் தேதி, 'விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கிறது' என ஆர்ச்சர் பதிவிட்டிருந்தார். இதை, கடந்த 2020ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் மும்பையில் நிகழ்ந்த மின்துண்டிப்புடன் இணைத்து, ட்விட்டர்வாசிகள் கருத்து பதிவிட்டனர்.

இந்த வரிசையில்தான், ஆர்ச்சரின் 'ஸ்வீப்' எனும் ட்விட்டர் பதிவையும் ஆம் ஆத்மி தங்கள் வெற்றியுடன் ஒப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT