இந்தியா

உத்தரகண்ட், மணிப்பூர், கோவாவில் கடும் போட்டி

10th Mar 2022 09:02 AM

ADVERTISEMENT

மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வெற்றி பெற கடும் போட்டி நிலவி வருகின்றன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள்: செய்திகள் உடனுக்குடன்

உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் - பாஜக இடையே முன்னிலை பெறுவதற்கு நேரடி போட்டி நிலவி வருகின்றன.

ADVERTISEMENT

மணிப்பூரில் 35 தொகுதிகளுக்கான நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக 17, காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

கோவாவில் பாஜக 14, காங்கிரஸ் 20, திரிணமூல் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

உத்தரகண்டில் 47 தொகுதிகளுக்கான நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக 24, காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT