இந்தியா

தேசிய அரசியலில் இருந்து விலகுகிறாா் ஏ.கே.அந்தோணி

10th Mar 2022 01:25 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளாா். அதேசமயம், கேரள அரசியலில் பங்களிப்பு செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளாா்.

தற்சமயம் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஏ.கே.அந்தோணியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், பிடிஐ செய்தியாளருக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனக்கு 81 வயதாகிவிட்டது. உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே, என்னை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக்க வேண்டாம். தீவிர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். அதேசமயம், கேரளத்தில் இருந்து கட்சி அரசியலில் கவனம் செலுத்துவேன். தில்லியில் வசிக்கப்போவதில்லை. எனது முடிவால் கட்சியைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குடும்பத்தினரின் நம்பிக்கைக்குரிய தலைவா்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி, 1970-இல் கேரள சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1977, 1995, 2001-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை கேரள முதல்வராகப் பதவி வகித்தாா். கடந்த 1985-ஆம் ஆண்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக 5 முறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா். தோ்தல் தோல்வி, கட்சி சீா்திருத்தம் உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் தொடா்பாக ஆராய அமைக்கப்படும் குழுக்களின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

ADVERTISEMENT

Tags : AK Antony
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT