இந்தியா

ஐந்து மாநில பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கடும் பின்னடைவு

10th Mar 2022 11:41 AM

ADVERTISEMENT


புதுதில்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. தேர்தல் முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவும் அந்தந்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், காலை 11.30 நிலவரப்படி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவை ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

உத்தரப்பிரதேசம், உத்தரகண்டில் பெரும்பான்மை இடங்களை விட கூடுதலான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நிலையில், நான்கு மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காலை 11.30 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நிலவரம்:

உத்தரப் பிரதேசம் - 403

பாஜக : 241
சமாஜ்வாதி : 109
பகுஜன் சமாஜ் : 5
காங்கிரஸ் : 4

பஞ்சாப் - 117

ஆம் ஆத்மி : 87
காங்கிரஸ் : 14
சிரோமணி அகாலி தளம் : 9
பாஜக : 4

உத்தரகண்ட் - 70

பாஜக : 44
காங்கிரஸ் : 22

மணிப்பூர் - 41

பாஜக : 18
காங்கிரஸ் : 4

கோவா - 40

பாஜக : 18
காங்கிரஸ் : 11

இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார்: சுஷில் சந்திரா

ADVERTISEMENT
ADVERTISEMENT