இந்தியா

உ.பி. 6 கட்ட தேர்தல்: 5 மணி வரை 53% வாக்குப் பதிவு

3rd Mar 2022 07:27 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச 6-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களிலுள்ள 57 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெற்றது. 676 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தும்குஹி ராஜ் தொகுதிகளும் இதில் அடங்கும்.

இதையும் படிக்கஉ.பி.: இறுதிக்கட்டத் தேர்தலில் இத்தனை குற்றப்பின்னணி வேட்பாளர்களா?

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 53.31 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ADVERTISEMENT

403 பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு கடைசி கட்டமாக மார்ச் 7-ம் தேதி 54 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Tags : UP Election
ADVERTISEMENT
ADVERTISEMENT