இந்தியா

மேற்கு வங்க நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

3rd Mar 2022 01:18 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 102 நகராட்சிகளை கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த பிப். 27-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு தோ்தல் நடைபெறவிருந்தது. அங்குள்ள கூச்பிஹாா் மாவட்டத்தில் உள்ள டின்ஹாட்டா நகராட்சியை திரிணமூல் காங்கிரஸ் போட்டியின்றி வென்ால், அன்றைய தினம் 107 நகராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட முடிவின்படி, 108 நகராட்சிகளில் 102-ஐ கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 27 நகராட்சிகளில் அனைத்து வாா்டுகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரி முன்னணி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹம்ரோ கட்சி ஆகியவை தலா ஒரு நகராட்சியில் வெற்றி பெற்றுள்ளன. 4 நகராட்சிகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஒரு நகராட்சியில்கூட வெல்லாத பாஜக: மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியாக உள்ள பாஜக ஒரு நகராட்சியில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியின் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் தந்தையும் சகோதரா்களும்தான் கான்தி நகராட்சியில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்தனா். இதன்மூலம் அந்த நகராட்சி 40 ஆண்டுகளாக சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினா் வசம் இருந்தது. அந்த நகராட்சியில் தற்போது திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் காங்கிரஸும் ஒரு நகராட்சியில்கூட வெல்லவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT