இந்தியா

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியா

3rd Mar 2022 11:47 AM

ADVERTISEMENT


புது தில்லி: ருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

ருமேனியாவிலிருந்து காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் தற்போது சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்கள் இன்னமும் 3 நாள்களில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க.. சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?

புசாரெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு புதன்கிழமை 6 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுபோலவே, வியாழன் மற்றும் வெள்ளியன்றும் தலா 6 விமானங்கள் இயக்கப்படும், அந்த வகையில் புதன்கிழமை மட்டும் 1,300 மாணவர்கள் இந்தியா திரும்பினர் என்றார் மத்திய அமைச்சர்.

ADVERTISEMENT

மேலும், ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் 2 நாள்கள் தங்கியிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT