ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் இன்று காலை 11.30 மணியளவில் 9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது.
காலாஹான்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வீடுகளில் சிறு விரிசல் காணப்பட்டாலும், பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ADVERTISEMENT